தினமலர் 24.12.2009
வரிசெலுத்தாத கட்டங்களில் நடவடிக்கை : மாநகராட்சி எச்சரிக்கை
மதுரை: “”மதுரை மாநகராட்சி பகுதியில் சொத்து வரி செலுத்தாத, கட்டடங்களில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும்,” என, மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் தெரிவித்துள்ளார். வரி வசூல் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
வரி வசூல் செய்யாமல் மெத்தனமாக இருக்கும் உதவி கமிஷனர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், வரித் தண்டலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வாடகை அடிப்படையில் விடப்பட்டுள்ள, கடை உரிமைதார்கள், ஏலதாரர்கள் உரிமத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையெனில், உரிமத்தை ரத்து செய்து, கடையை பூட்டி மாநகராட்சி பொறுப்பில் எடுப்பதுடன், வரும் காலங்களில் ஏலத்தில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு, அவர்களின் பெயர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும். இழப்பீட்டுத் தொகையும் சேர்த்து வசூலிக்கப்படும். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை செலுத்தாமல், உள்ள கட்டங்களுக்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும் , என்றார். கூட்டத்தில், துணை கமிஷனர் சிவராசு, உதவி கமிஷனர்கள் பாஸ்கரன், தேவதாஸ், ரவீந்திரன், ராஜகாந்தி, அங்கையற்கண்ணி, உதவி நகரமைப்பு அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் பங்கேற்றனர