தினமலர் 07.04.2010
100 சதவீதம் வரி வசூலிப்பு கீழ்பென்னாத்தூர் சாதனை
கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி 100 சதவீதம் வரி வசூலித்து சாதனை படைத் துள்ளது.இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பழனி கூறியதாவது:கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் 2009-2010ம் ஆண்டுக்கு செலுத்த வேண் டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், இது தவிர குத்தகை தொகைகள் அனைத்தும் நிலுவையின்றி 100 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.இதற்கு பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், மன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் ஒத்துழைப்பே காரணம் ஆகும்.
மேலும், மின் கட்டணம் போன்று குடிநீர் கட்டணத்தை பிரதி மாதமும், வரியினங்கள் அனைத்தையும் அந்தந்த காலத்துக்குள் பொதுமக்கள் செலுத்தி நிர்வாகத்துடன் ஒத்துழைப்பு தர வேண்டும். இதன் மூலம், பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவதற்கு உறுதுணையாக இருக் கும். வளர்ச்சிப் பணிகளும் கூடுதலாக செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
