தினமலர் 14.05.2010
மே 18ல் சொத்துவரி பெயர் மாறுதலுக்கு சிறப்பு முகாம்
சேலம்: சேலம் மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் சொத்துவரி செலுத்துவோர், பெயர் மாறுதல் செய்வதற்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் மே 18ல் சிறப்பு முகாம் நடக்கிறது.
சேலம் மாநகராட்சி சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலக பகுதிகளில் சொத்துவரி செலுத்துவோர் பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பத்திரத்தின்படி மாநகராட்சி பதிவேடுகளில் உள்ள பெயரை தற்போதைய பத்திரத்தின்படி பெயர் மாறுதல் செய்வதற்கு கடந்த ஆண்டு சிறப்பு பெயர் மாறுதல் முகாம் நடந்தது.
நடப்பாண்டு மே 18ம் தேதி மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் காலை 10.30 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை சிறப்பு பெயர் மாறுதல் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முகாமில் சொத்துவரி பெயர் மாற்றம் செய்ய விரும்புவோர் கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் வருமாறு:
* சொத்துவரி பெயர் மாறுதல் செய்யக்கோரும் விண்ணப்பத்தினை அந்தந்த மண்டல அலுவலகத்திலிருந்து 50 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தி பெற்று, பெயர் மாறுதல் கட்டணமாக ஒரு விண்ணப்பத்துக்கு 100 ரூபாயை மண்டல அலுவலகத்தில் வெள்ளி, சனி மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் செயல்படும் சிறப்பு மையத்தில் செலுத்தி, அந்த ரசீது சீட்டின் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
* விண்ணப்பத்தில் இரண்டு ரூபாய்க்கான நீதிமன்றவில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
* சம்மந்தப்பட்ட சொத்துக்கு 2010-11 முதலாம் அரையாண்டு முடிய ( 2010 செப்டம்பர் 30 வரை) சொத்துவரியை நிலுவையின்றி செலுத்தி, அந்த ரசீது நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
* சொத்தின் பெயர் மாறுதலுக்கு சம்மந்தப்பட்ட பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் ஜெராக்ஸை இணைக்க வேண்டும். அசல் பத்திரத்தையும் சரிபார்ப்புக்கு நேரில் எடுத்து வர வேண்டும்.
* பெயர் மாறுதலுக்குரிய விண்ணப்பங்கள் மே 18ம் தேதி வரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.இந்த சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே பெயர் மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்படும