தினத்தந்தி 20.11.2013
பன்னிமடை நஞ்சுண்டாபுரம்; ரூ.2¼ கோடி செலவில் தார்ச்சாலைகள் அமைத்தல்

கோவை அருகே பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் ஊராட்சி பகுதிகளில் பிரதம மந்திரி
கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.2 கோடியே 18 லட்சம் செலவில்
தார் சாலைகள் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை பன்னிமடை,
நஞ்சுண்டாபுரம் பகுதிகளில் நடைபெற்றது. வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., பூமி
பூஜைக்கு தலைமை தாங்கி, தார்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார்,
ஊராட்சி தலைவர்கள் சரவணக்குமார்(பன்னிமடை),
வி.கே.வி.சுந்தரராஜ்(நஞ்சுண்டாபுரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய
தலைவர் விஜயன் வரவேற்று பேசினார். பன்னிமடை ஊராட்சி பகுதிகளில் இருந்து
ராமநாதபுரம் வரை ரூ.1 கோடியே 73 லட்சத்திலும், நஞ்சுண்டாபுரம் பகுதியிகளில்
தடாகம் சாலையில் இருந்து ஊராட்சி அலுவலகம் வரை ரூ.45 லட்சம் செலவிலும்
தார்ச்சாலை அமைக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதிமணி பாலகிருஷ்ணன், குணசேகரன்,
டியூகாஸ் துணைதலைவர் செல்வராஜன், கவுன்சிலர்கள் செல்வராஜ், மகேஸ்வரன்,
சுமதி ஆனந்தன், சோமசுந்தரம், நாகராஜ், மருதையன், மற்றும்
சின்னத்தம்மகவுடர், ஜெயபால், கூட்டுறவு சங்க துணை தலைவர் துரைசாமி,
ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
