தினமலர் 24.08.2010
4 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை
திண்டுக்கல் : திண்டுக்கல் நகராட்சியில் 4 வது கட்டமாக 283 கர்ப்பிணிகளுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப் பட்டது.
நகராட்சி தலைவர் நடராஜன் கூறியதாவது: திண்டுக்கல் நகராட்சியில் துப்புரவு பணிகள் நன்றாக நடந்து வருகிறது. விரைவில் குப்பை இல்லாத நகரம் என்ற பெயரை எடுப்போம் தரம்குறைந்த பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடைகளில் யாராவது பயன்படுத்தினால் மக்கள் தகவல் தெரிவிக்கலாம். ஆத்தூர், காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகளால் குடிநீர் தேவை பற்றாக்குறையாக உள்ளது.வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத் திற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதற்கான திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு விட்டன. குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.கர்ப்பிணிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகள் விடுபட்டு இருந்தால் உடனடியாக தொடர்பு கொண்டு பெற் றுக் கொள்ளலாம். தற்போது 283 கர்ப்பிணிகளுக்கு 16 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் வழங்கப் பட்டுள்ளது. இதுவரை 4 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு உதவித் தொகை வழங்கப் பட்டுள் ளது. இவ்வாறு அவர் பேசினார். கமிஷனர் லட்சுமி, கவுன்சிலர்கள் மார்த் தாண்டன், ரபிக், சேகர், ரஜினிகாந்த், சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
