தினமணி 22.03.2010
கோவைக்கு கூடுதல் திட்டங்கள்: பட்ஜெட்டுக்கு மேயர் வரவேற்பு
கோவை, மார்ச் 21: தமிழக பட்ஜெட்டில் கோவைக்கு கூடுதல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு மேயர் ஆர்.வெங்கடாசலம் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
÷ போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.284 கோடியில் வெளிவட்டச்சாலை, மத்திய சிறையில் ரூ.20 கோடியில் செம்மொழி தமிழ்ப் பூங்கா உள்ளிட்டவற்றால் கோவையில் உள்கட்டமைப்பு வசதி பெருகும்.
÷9}ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச அகராதி வழங்கும் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துறை, அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கட்டணம் ரத்து உள்ளிட்டவற்றால் மக்கள் பயன்பெறுவார்கள்
. ÷மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்த முதல்வருக்கும், நிதி அமைச்சருக்கும் கோவை மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் அவர்.