தினமலர்      02.04.2013
                            
                        
	                    பளியன்குடியில் “போர்வெல்’ கூடலூர் நகராட்சி தீர்மானம்
கூடலூர்:பளியன்குடியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு, குடிநீர் வசதிக்காக புதிய போர்வெல் அமைக்க, கூடலூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூடலூர் நகராட்சி கூட்டம், தலைவர் அருண்குமார் தலைமையில், கமிஷனர் ராஜேந்திரன், துணைத்தலைவர் கரிகாலன் முன்னிலையில் நடந்தது. வீட்டு குடிநீர் இணைப்புக்காக சாலைகளை தோண்டுவதற்கு, சாலை சீரமைப்புக் கட்டணத்தை 5 சதவீதம் உயர்த்துவது, பழங்குடியின மக்கள் வசிக்கும் பளியன்குடியில், குடிநீர் வசதி செய்வதற்காக போர்வெல் அமைப்பது.
லோயர்கேம்ப் மற்றும் பளியன்குடிக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக புதிய குடிநீர் சேமிப்பு தொட்டி கட்டுவது, உட்பட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
