தினபூமி 13.02.2014
அரசு மருத்துவமனையில் உணவகம்: முதல்வர் துவக்கி வைத்தார்
சென்னை,பிப்.13 – திருச்சி மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 60 மில்லியன்
லிட்டர் குடிநீர் வழங்கும் ரூ.221.42 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட
குடிநீர் அபிவிருத்தி திட்டங்களையும் முதல்_அமைச்சர் ஜெயலலிதா திறந்து
வைத்தார்.
மேலும் மதுரை மாநகராட்சியில் ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில்
கட்டப்பட்டுள்ள அம்மா உணவகம் மற்றும் மாட்டுத்தாவணியில் ஆம்னி பஸ் நிலையம்,
போள?ர் ஒன்றியம் படவீடு மற்றும் கும்பகோணம், அனத்த நல்லூர் ஒன்றியங்களில்
கூட்டு குடிநீர் திட்டங்களையும் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அலுவலக கட்டிடம், துப்புரவு
பணியாளர்கள் குடியிருப்புகள் மற்றும் உபரி எரிவாயு கூடங்கள் ஆகிய
பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், கூடலூர் (தேனி) நகராட்சியில்
கட்டப்பட்டுள்ள துப்புரவு பணியாளர் குடியிருப்புகள், மேட்டுப்பாளையம்,
வேட்டைக்காரன் புதூர் மற்றும் மேலசொக்கநாதபுரம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும்
தேவக்கோட்டை நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் ஆகியவற்றையும்
முதல்_அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில்,
நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில், 221
கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தை
காணொலிக் காட்சிமூலமாகத் துவக்கி வைத்தார்கள். மேலும், 18 கோடியே 42
லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்கள்; சென்னை மாநகராட்சி பகுதியில் 56
கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்,
சுரங்கப் பாதை மற்றும் கலை அரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்து, 28 கோடியே
87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டங்களைத் துவக்கி, 13
கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களுக்கு அடிக்கல்
நாட்டினார்கள்.
நகர்ப்புறங்களில் பெருகிவரும் மக்கட்தொகைக்கேற்ப குடிமைப் பணிகளை
நிறைவேற்றிடவும், நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை
மேம்படுத்திடவும், அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை
வழங்கிடவும்தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு
ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில், 221 கோடியே 42 லட்சம்
ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தை தமிழ்நாடு
முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார்கள்.
மேலும், மதுரை மாநகராட்சியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இராஜாஜி
அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகம் மற்றும் மாட்டுத்
தாவணி பகுதியில் 9 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள
ஆம்னி பேருந்து நிலையம்; தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சியில் 75 லட்சம்
ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துப்புரவு பணியாளர் குடியிருப்பு;
பேரூராட்சிகள் நிர்வாகம் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பேரூராட்சிகளில்
7 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலத் கட்டப்பட்டுள்ள புதிய
பேரூராட்சி அலுவலகக் கட்டடங்கள், நவீன சுகாதார வளாகங்கள், வணிக வளாகக்
கட்டடம், குடிநீர் அபிவிருத்தி பணிகளத், மேம்படுத்தப்பட்ட பூங்காக்கள்,
நவீன எரிவாயு தகனமேடை;
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திருவண்ணாமலை மாவட்டம்,
போளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட படவேடு மற்றும் 46
குடியிருப்புகளுக்கு 3 கோடியே
3 லட்சம் பொய் மதிப்பீட்டிலும்; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம்
ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட 73
குடியிருப்புகளுக்கு 9 கோடியே
95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; திருச்சிராப்பள்ளி மாவட்டம்,
அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், திருப்பராய்த்துறை ஊராட்சிக்குட்பட்ட 11
குடியிருப்புகள் மற்றும் பெருகமணி ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்பு
ஆகியவற்றிற்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; திருச்சிராப்பள்ளி
மாவட்டம், மேட்டுப்பாளையம் பேரொட்சிக்கு 16 லட்சம் பொய் மதிப்பீட்டிலும்;
கோயம்புத்தூர் மாவட்டம், வேட்டைகாரன்புதூர் பேரூராட்சிக்கு 55 லட்சம்
ரூபாய் மதிப்பீட்டிலும்; தேனி மாவட்டம், மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு
6 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; சிவகங்கை மாவட்டம்,
தேவகோட்டை நகராட்சிக்கு 8 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்
அமைக்கப்பட்டுள்ள
குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள்; என 28 கோடியே 87 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டிலான குடிநீர் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா
அவர்கள் இன்று துவக்கி வைத்தார்கள்.
மேலும், திருவண்ணாமலை நகராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்படவுள்ள துப்புரவு பணியாளர் குடியிருப்பு மற்றும் 1 கோடியே 50
லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நகராட்சி அலுவலகக் கட்டடம்;
காஞ்சிபுரம் மாவட்டம் _ காஞ்சிபுரம் மற்றும் பல்லவபுரம் நகராட்சிகள்,
கோயம்புத்தூர் மாவட்டம் _ பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சிகள்,
கடலூர் நகராட்சி, நாமக்கல் மாவட்டம் _ திருச்செங்கோடு நகராட்சி,
<ரோடு மாவட்டம் _ கோபிசெட்டிப்பாளையம் நகராட்சி, நீலகிரி மாவட்டம் _
உதகமண்டலம் நகராட்சி, தஞ்சாவூர் நகராட்சி, நாகப்பட்டினம் நகராட்சி
மற்றும் திருப்பூர் மாநகராட்சி ஆகியவற்றில்
9 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள உயிரி எரிவாயு கூடங்கள்;
__ என 13 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்கள் மற்றும்
உயிரி எரிவாயு கூடங்களுக்குதமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல்
நாட்டினார்கள்.
ஆக மொத்தம், முதலமைச்சர்ஜெயலலிதா அவர்களால் நகராட்சி நிர்வாகத் துறை
சார்பில் இன்று அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைக்கப்பட்ட பணிகளின்
மதிப்பு 338 கோடியே 92 லட்சம் பொய் ஆகும்.
நகராட்சி நிர்வாக ஆணையரகம், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில்
மக்கள் சேவையை மேம்படுத்தும் வகையில் 24 லட்சம் பொய் செலவில்
ஏற்படுத்தப்பட்ட
பெரு வலைதளத்தை(Web Portal – http://portal.cma.tn.gov.in/cma)முதலமைச்சர்
ஜெயலலிதா அவர்கள் துவக்கி வைத்தார்கள். இந்த வலைதளத்தின் மூலம் பல்வேறு
நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளால் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள்,
ஒப்பந்தப் புள்ளிகள், துறை தொடர்பான அரசாணைகள் குறித்து மக்கள் எளிதில்
அறிந்து கொள்ள முடியும்.
மேலும், நகராட்சிப் பணிகளை எளிதில் கண்காணிக்க வழி செய்யும் வகையில்
நகராட்சி பொறியாளர்கள் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் 30
பேருக்கு கையடக்க கணினிகளையும் (ஐடஅஈ), நகராட்சியில் காலியாகவுள்ள 92
துப்புரவு ஆய்வாளர்கள் பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு
பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 3 பேருக்கு கையடக்க கணினிகளையும் 4
பேருக்கு துப்புரவு ஆய்வாளருக்கான பணி நியமன ஆணையையும் முதலமைச்சர்
ஜெயலலிதா வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம்,
நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, கதர்
மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி, சென்னை மாநகராட்சி
மேயர் சைதை சா. துரைசாமி, அரசு தலைமைக் கொறடா ஆர். மனோகரன், தலைமைச்
செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், ., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்
வழங்கல் துறைச் செயலாளர் கே. பணீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர்
விக்ரம் கபூர், ., நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி. காம்ப்ளே, .,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சி. விஜயராஞு
குமார், பேரூராட்சிகளின் இயக்குநர் டாக்டர் ஆர் செல்வராஜ்ஞு, ., மற்றும்
அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.