தினத்தந்தி         06.06.2013 
                            
                        
	                    அரியாங்குப்பத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ரங்கசாமி திறந்து வைத்தார்
புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தில், கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் கிராம பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சட்டசபை சபாநாயகர் சபாபதி தலைமை தாங்கினார். அமைச்சர் பன்னீர்செல்வம் கல்வெட்டை திறந்து வைத்தார்.விழாவில் முதல்–அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார். விழாவில், உள்ளாட்சி துறை செயலாளர் ஸ்ரீகாந்த், இயக்குனர் ரவிபிரகாஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.விழாவுக்கான ஏற்பாடுகளை ஆணையர் முனுசாமி செய்து இருந்தார். விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
