தினமணி 13.02.2014
எடப்பாடி நகர்மன்ற ஆணையர் பொறுப்பேற்பு
தினமணி 13.02.2014
எடப்பாடி நகர்மன்ற ஆணையர் பொறுப்பேற்பு
எடப்பாடி நகர்மன்றத்துக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஆணையராக நியமிக்கப்பட்ட ஜி.தனலட்சுமி புதன்கிழமை பொறுப்பேற்றார்.
எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் கடந்த 2008- 2009-ஆம் ஆண்டு ஆணையராக
இருந்தவர் ஏ.அருணாசலம். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
பணிமாறுதலாகிச் சென்றார். அதற்குபிறகு, எடப்பாடி நகர்மன்றத்துக்கு ஆணையர்
நியமிக்கப்படவில்லை.
கடந்த 5 ஆண்டுகளாக நகராட்சிக்கு என தனியாக ஆணையர் நியமிக்கப்படாமல்
பொறியாளர்களே கூடுதல் பொறுப்பு வகித்து வந்தனர். தற்போது 5 ஆண்டுகளுக்குப்
பிறகு சத்தியமங்கலம் நகர்மன்ற ஆணையராக பணியாற்றி வந்த ஜி.தனலட்சுமி
எடப்பாடி நகர்மன்ற ஆணையராக நியமனம் செய்யப்பட்டு புதன்கிழமை
பொறுப்பேற்றார். .
இதுகுறித்து தனலட்சுமி கூறியது: எடப்பாடியை சுற்றிப்பார்க்கும் போது
குப்பைகள்தான் அதிக அளவில் காணப்படுகிறது. அவற்றை சீர்படுத்துவதில்தான்
என்னுடைய முதல்கவனம் இருக்கும் என்றார் அவர்.