தினமலர் 21.04.2010
குடிநீர் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கு அழைப்பு
சேலம்: தமிழ்நாடு முழுவதும் குடிநீர் வடிகால் வாரியத்தில் 50 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது குறித்து மாவட்ட கலெக்டர் சந்திரகுமார் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் 50 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மனுதாரர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளன. அதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 2009 ஜூலை 1 அன்று 58 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., இனத்துக்கு 46 பணியிடங்களும், எஸ்.டி., இனத்துக்கு நான்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் எஸ்.சி.,யாக இருந்தால், உத்தேச பதிவு மூப்பு 31.12.1999 வரையிலும், எஸ்.டி.,யாக இருந்தால் 30.06.1999 வரையிலும் இருத்தல் வேண்டும்.
எஸ்.சி., மாற்றுத்திறனாளிகள் 30.06.1993 வரை. மேற்கண்ட சீனியாரிட்டி உள்ள எஸ்.சி., எஸ்.டி.,(ஆண்,பெண்) மற்றும் மாற்றுத்திறனாளிகளான பதிவர்கள் மட்டும், அவர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை, பட்டப்படிப்பு சான்றிதழ் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் நகலுடன் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனரை வரும் 22ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு பதிவு விபரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.