தினமணி 06.08.2010
சுரண்டையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி
சுரண்டை, ஆக. 5: சுரண்டையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி மூலம் கடனுதவியும், பேரூராட்சி மூலம் சுழல்நிதியும் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. சுரண்டை பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர்ப. கோமதிபழனி தலைமை வகித்தார். பேரூராட்சி நிர்வாக அதிகாரி ம. சாமுவேல் துரைராஜ், சுரண்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலர் சாமுவேல் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் எஸ். பழனி, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கடனுதவியும், ரூ.25 ஆயிரம் சுழல்நிதியையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில், பேரூராட்சி துணைத் தலைவர் ப. ராமர், பேரூராட்சி உறுப்பினர்கள் எஸ்.கே.டி. ஜெயபால், அ. சீனிவாசன், அருணாசலக்கனி, ராஜேந்திரன், கல்பனா அன்னப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.