தினமலர் 26.05.2010
தமிழில் பெயர் பலகை கலெக்டர் வேண்டுகோள்
கடலூர் : வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் வரும் 31ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:கோவையில் வரும் ஜூன் மாதம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள் ளது. அதனையொட்டி தமிழகத்தில் அனைத்து வணிக நிறுவனங்களும் பெயர் பலகையை தமிழில் வைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆகவே, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர்களும் வரும் 31ம் தேதிக்குள் தங்கள் நிறுவனத்தின் பெயரை தமிழில் எழுதி வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும