தினமணி         05.03.2013
                            
                        
	                    துப்புரவுப் பணியாளர்: நகராட்சியில் நேர்முகத் தேர்வு
பண்ருட்டி நகராட்சியில் காலியாக உள்ள துப்புரவுப் பணி இடங்களைப் பூர்த்தி செய்வதற்காக நேர்முகத் தேர்வு நகராட்சி வளாகத்தில் திங்கள்கிழமை நடந்தது.
பண்ருட்டி நகராட்சியில் போதிய துப்புரவுப் பணியாளர்கள் இல்லாததால், 33 வார்டு பகுதிகளில் துப்புரவுப் பணி மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.
காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய நகர நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நாடுனர் பட்டியல் பெறப்பட்டு திங்கள்கிழமை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஆர்.ராதா நேர்முகத் தேர்வு நடத்தினார்.
