தினமணி 24.09.2014
புதிய மேயர் இன்று பதவியேற்பு
கோவை மாநகராட்சியின் 5-ஆவது மேயராக அதிமுகவைச் சேர்ந்த ப.ராஜ்குமார், புதன்கிழமை பதவியேற்கிறார்.
கோவை மாநகராட்சி மேயராக இருந்த அதிமுகவின் செ.ம. வேலுசாமி, கடந்த மே மாதம் பதவி விலகினார். அதையடுத்து கடந்த 18-ஆம் தேதி மாநகராட்சி மேயர் பதவிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் அதிமுகவைச் சேர்ந்த ப.ராஜ்குமார் வெற்றி பெற்றார்.
ப.ராஜ்குமார் திங்கள்கிழமை மாலை சென்னை சென்றார். தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற பின், செவ்வாய்க்கிழமை கோவை திரும்பினார்.
கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் புதன்கிழமை காலை மாநகராட்சியின் 5-ஆவது மேயராக ப.ராஜ்குமார் பொறுப்பேற்கிறார். இதற்காக கலையரங்கம் தயாராகி வருகிறது.