தினமணி 30.03.2010
உறையூர் கிழக்கு நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு விருது
திருச்சி, மார்ச் 29: திருச்சி உறையூர் கிழக்கு நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த வார்டு கல்விக் குழுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் நகர்ப்புற வள மையத்தின் சார்பில், சிறந்த வார்டு கல்விக் குழுக்கான விருது வழங்கும் விழா உறையூர் பாண்டமங்கலம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் அழகு சுப்பிரமணியன் தலைமை வகித்தார். விழாவில், நகர்ப்புற வள மையத்திற்குள்பட்ட 84 பள்ளிகளில் சிறந்த வார்டு கல்விக் குழு பள்ளியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறையூர் கிழக்கு நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செல்வரத்தினம் விருதை வழங்கினார்.
அந்த விருதை மாகராட்சியின் 55-வது வார்டு உறுப்பினர் வை. புஷ்பம், பள்ளியின் தலைமையாசிரியை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.