தினமணி 10.01.2014
ரூ.3.20 லட்சத்தில் 4 குடிநீர்த் தொட்டிகள்
சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட 4 குடிநீர்த் தொட்டிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதன்கிழமை திறக்கப்பட்டன.
ஆம்பூர் நகரம் 1-வது வார்டு மோட்டுக் கொல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 4 குடிநீர்த் தொட்டிகளை எம்எல்ஏ அ.அஸ்லம் பாஷா திறந்து வைத்தார். நகரமன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல். குமார், நகரமன்ற உறுப்பினர் அமீன், துப்புரவு அலுவலர் பாஸ்கர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் வி.ஆர்.நசீர் அஹ்மத், நகரச் செயலர் ஹமீத், தமுமுக நகரச் செயலர் தப்ரேஸ் அஹ்மத், நபில் உள்பட பலர் பங்கேற்றனர்.