தி இந்து 21.07.2017
கோயம்பேடு மார்க்கெட்டில் 674 கடைகளில் நிலுவை: சொத்து வரி ரூ.1 கோடியே 77 லட்சம் வசூல்
கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.2 கோடியே 48 லட்சம் மதிப்பில் சொத்து
வரியை நிலுவையில் வைத் துள்ள 729 கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்
என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து
நேற்று முன்தினம் மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள், கோயம்பேடு
சந்தையில் முகாமிட்டு, சொத்து வரி நிலுவை வைத்துள்ள கடை களை மூடும்
நடவடிக்கையை மேற் கொண்டனர். அதைத் தொடர்ந்து நேற்று மாலை 6 மணி
நிலவரப்படி, மொத்தம் 674 கடைகள் நிலுவை சொத்து வரியை செலுத்தின.
இதனால் ரூ.1 கோடியே 77 லட்சம் வசூலானது. மீதமுள்ள கடைகள் குறித்து
மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “கணினியில் ஏற்பட்ட தவறு
காரணமாக ஒரே கடைக்கு 2 ரசீதுகள் என 30 கடைகளுக்கு வந்துள்ளது. அதனால்
அவற்றை ரத்து செய்துவிட்டோம். தற்போது சீல் வைக்கப்பட்டுள்ள 25 கடை
களின் உரிமையாளர்கள், நிலுவை தொகையை செலுத்தி, மாநகராட்சி ஆணையரின்
அனுமதி பெற்ற பின்னரே கடைகளைத் திறக்க அனுமதிக்கப்படும்” என்றார்.