தினமணி 07.04.2013
சாலைகளில் கால்நடைகள்சுற்றித் திரிந்தால்உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சிக்குள்பட்ட தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகள், ஆடு, மாடுகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் நகரில் சுகாதார கேடு ஏற்படுகிறது.
எனவே, மூன்று நாள்களுக்குள் நகரில் சுற்றித் திரியும் ஆடு, மாடுகளை அதன் உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், சாலை ஓரங்களில் ஆடு மாடுகளை கட்டுவதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
எனவே ஆடு மாடுகளை தங்களது சொந்த இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அவை ஏலம் விடப்படும் அல்லது உரிமையாளரிடம் தண்டனை கட்டணம் வசூல் செய்யப்படும் என
ஜயங்கொண்டம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.